நக்கீரன்-முதல்பக்கம்
கவிதை

விழவெடுத்தலும், இழவெடுத்தலும்..
.....................................................................
நெஞ்சில் எரியும் நெருப்பு
.....................................................................
உயிர்ப் பழி கேக்கும் சாமிகள்!
.....................................................................
கொசுவுக்கு ஒரு கோரிக்கை - ஆரூர் புதியவன்
.....................................................................
குர்து மலைகள்
.....................................................................
கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது
.....................................................................
ஒரு தடியின் சத்தம்!
.....................................................................
ஜெயக்குமார் கவிதைகள்
.....................................................................
நா.முத்துக்குமார் நினைவுக் கவிதை!
.....................................................................
மழை துளிர்க்கும் பெருநதி
.....................................................................
ஜீலை 27 – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறப்பு
.....................................................................
நினைத்து நினைத்து பார்த்தேன்
.....................................................................
கல்வீசும் ரோஜாக்களுக்கு...
.....................................................................
ஆண்டைகளால் ஆண்டியாய் போனவன்!
.....................................................................
காவியின் நாயகர்களே..!
.....................................................................
மறத்தமிழன் மறப்பானா?
.....................................................................
யார் வீட்டுத் தோட்டமென்று தெரியுமா...????
.....................................................................
உனக்கும் எனக்குமான ஞாயிறு!
.....................................................................
இன்போ அம்பிகா கவிதைகள்
.....................................................................
காட்டுச் சுதந்திரம் காப்பதற்காக...
.....................................................................
சபதங்கள்
.....................................................................
மெரினாவில் தொடரும் போராட்டம்!
.....................................................................
மெரீனா - சில குறிப்புகள்
.....................................................................
எழுதிடு நண்பா....! எழுச்சியின் தொடர்ச்சி...!
.....................................................................
சரித்திர நெருப்பு நாம்! -ஆரூர் தமிழ்நாடன்
.....................................................................
கவிக்கோ அப்துல்ரகுமான் பொங்கல் கவிதை
.....................................................................
சென்னையை புரட்டிய வர்தா புயல்!
.....................................................................
சுட்டெரித்த கருங்கடல் கண்ணீரில் நனைகிறது
.....................................................................
என் எழுதுகோலின் பிறவிகள்! -கவிக்கோ அப்துல்ரகுமான்
.....................................................................
தமிழகத்தின் உரிமைநீ காவிரி!
.....................................................................
வெறுப்பறுப்போம்!
.....................................................................
உறங்காத ராகம்...
.....................................................................
எதைத் தேர்ந்தெடுப்பீர்?
.....................................................................
விதைகள் உறங்குவதில்லை...
.....................................................................
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள்! - கலாம்
.....................................................................
மருத - நாயகன் நம்மாழ்வார்!
.....................................................................
தொடமுடியுமா மரணம்?-சென்னிமலை தண்டபாணி
.....................................................................
வாலியின்றி போவதெங்கே...
.....................................................................
ஒற்றைக்கால் சிலம்பு
.....................................................................
நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!
.....................................................................
பெருத்த பிள்ளையாரும் கனத்த சுமையும்
.....................................................................
நதியின் அடியில் நகரும் கூழாங்கல்லாய்... கவிதைகள்
.....................................................................
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
.....................................................................
விடிவு கனவே ...! - கவிஞர் ருக்மணி
.....................................................................
கவிதை: இனிப்புத் தோப்பே...
.....................................................................
காடுகளோடு பேசித் திரியும் மனநிலை பிசகியவர்கள்
.....................................................................
செம்மொழி மாநாட்டில் ஈழக்கவிதையின் தாக்கம்
.....................................................................
மே-18 - விழிமழைக் காலம் விரைவில் மாறும்
.....................................................................
அண்ணாமலை கவிதைகள்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :16, அக்டோபர் 2017(15:22 IST)
மாற்றம் செய்த நாள் :16, அக்டோபர் 2017(18:12 IST)


கொசுவுக்கு ஒரு கோரிக்கை
- ஆரூர் புதியவன்



மொத்த உலகையும்
வென்ற 
மாமன்னன் அலெக்சாண்டரை
பாபிலோனில் 
மூக்கில் கடித்து
மூச்சைக் குடித்த 
விஷக்கொசுவே...

உனக்கு
பழனிசாமிகளெல்லாம்
எம்மாத்திரம்...

ஏற்கனவே
தீக்கனவால்
தூக்கமின்றித் தவிக்கும்
இவர்களுக்குச் 
சோதனையாக
நீ வேறா?

முதலில் 
புழுவாக இருந்து
பிறகு
தல்ல சமயம் வந்ததும்
பறக்கத் தொடங்கும்
பாதகக் கொசுவே..!

இவர்களும்
உன்னைப் போன்றவர்கள்தானே
இதை எண்ணியாவது
இரக்கங் காட்ட மாட்டாயா?

அரசியல் ஒரு சாக்கடை
என்பதால்தான் 
நீயோ புகுந்துவிட்டாயா
நேரடியாக?

ரத்தம் குடிப்பவர்கள்
ஆட்சிக்கு வருவதால்
நீயும் வந்துவிடலாம் என்று
எதிர்பார்க்கிறாயா?

தோல்வி ஜூரம்
கண்டவர்கள்
ஜூரத்தை
அடக்குவதிலும்
தோல்வியடையட்டும் என்று
வேள்வி செய்கிறாயா?

நீ டெல்லியிலிருந்தே
குளிர்சாதனப் பேருந்தில் ஏறி
டிக்கெட் வாங்காமல்
இங்கே வந்ததாக
ஒரு கர்மவீர அமைச்சர்
சொல்கிறார்...?

டெல்லியிலிருந்து 
தமிழகத்திற்கு
வருவதெல்லாம்
சோதனைதானா?

நீ கடிக்க வேண்டிய 
ஆசாமிகள் பலரும்
அங்கே இருக்க
டெங்கே ஏன் வந்தாய்
இங்கே?

உன்னை ஒழிப்பதாய்ச் சொல்லி
ஓட்டு வாங்கியோரை
விட்டுவிட்டு
ஓட்டுப் போட்டவரை 
மட்டுமேன்
கடிக்கிறாய்...
ரத்தம் என்ற தேன்
குடிக்கிறாய்...!

நோட்டு வாங்கி
ஓட்டு போட்டதால்
காட்டமா?

அல்லது
சிறுமைகள் பொறுத்து
வாழ்கிறார்களே
என்ற சீற்றமா?

இல்லை
இந்தப் பாடாவதி அரசுகளிடன்
சிக்கிப் பாடாய்ப்படாமல்
பாடையில் போகட்டும் என்ற நாட்டமா?

ஏராளமான 
எளிய மக்களுக்கு
சங்கு ஊதிவிட்ட
அடங்காத டெங்குவே..!

மண்ணில் புழுவாய் நசியும் 
இந்த எளிய மக்களை 
இரக்கப்பட்டு விட்டுவிடு...

உன்னைப் போலவே
ஒரு பேர்வழி..
எப்போதும் 
பறந்தபடியே இருப்பார்..!
அவரும் 
உன்போலவே
ரத்தப்பிரியர்...

அப்பாவி மக்களுக்கு
அவரது 
அன்றாடத் தொல்லை
தாங்க முடியவில்லை..

கொஞ்சம் அவரைக் 
கடியேன்..!
கொடுமையை 
முடியேன்..?

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [1]
Name : மணிகண்டன் Date :1/9/2018 8:31:11 PM
அய்யா கவிதை நன்று