நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்

அரியவகை நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு
.....................................................................
தஞ்சை பிரகாஷ் ஏகாந்தமாய்ச் சுடர்கிறார்
.....................................................................
எதிர்காலம் சாமியப்பன் (என்கிற) சட்டைபோடாத சாமியப்ப
.....................................................................
வலம்புரிஜானின் வணக்கம்! நக்கீரன் வெளியீடு 2002
.....................................................................
அதிகாரத்தின் நிழலில் வேர்விடும் நவீன தீண்டாமை!
.....................................................................
நெல்லைவாசிகளே! வரலாறு முக்கியம்!
.....................................................................
பெண்மை ஒளிர்க!
.....................................................................
ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த பெண்ணுக்கு பாராட்டு விழா
.....................................................................
"இனிய உதயம்" இதழில் நான் ரசித்த கவிதை! கலைஞர்
.....................................................................
சின்னாபின்னாவாகும் தமிழ்!
.....................................................................
100 ஏக்கரில்ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு..
.....................................................................
தொண்ணூறுகளில் சுடிதார் புரட்சி! - பகவானந்ததாசன்
.....................................................................
விமர்சனம் - வாசகன் -படைப்பு : தமிழச்சி நேர்காணல்
.....................................................................
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா
.....................................................................
பெண்களுக்கான ஊடகம் அல்ல சினிமா! :தேன்மொழி
.....................................................................
தாயுமான என் தந்தை : தமிழச்சி தங்கபாண்டியன்
.....................................................................
கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!
.....................................................................
உயிர் காக்குமா ஹெல்மெட்? - ஷாக் ரிப்போர்ட்!
.....................................................................
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
.....................................................................
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தோம் : ஷம்மு
.....................................................................
நாஞ்சில் நாடனுடன் ஒரு விருது காணல்...!
.....................................................................
மருத்துவ விஞ்ஞானி லாரன்ஸ் - சிறப்பு சந்திப்பு
.....................................................................
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்... பேராசிரியர் பேட்டி
.....................................................................
மொழிமாற்றங்கள் இரண்டாம் தரமானது – உத்திரகுமார்
.....................................................................
எழுத்துலகில் ஆணாதிக்க சிந்தனை அதிகம் - ஷைலஜா
.....................................................................
தலித் எழுத்தாளர்களையே நம்பியிருக்குது இலக்கியம்
.....................................................................
தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி
.....................................................................
சிறைக் கம்பிகளுக்குள் கலைஞர்கள்
.....................................................................
எழுத்து என் சுதந்திரத்தை... - பவா.செல்லத்துரை
.....................................................................
அப்பாவின் அசரீரிதான்.... - விசாலி கண்ணதாசன்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :21, அக்டோபர் 2010(14:57 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2010(14:57 IST)


              60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அண்ணா தலைமையில் 1949-ம் ஆண்டு தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். டாக்டர் மு.வரதராசன் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். "புதுவாழ்வு' என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இன உணர்வின் அடையாளமாக போற்றப்படுபவர்.

33 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச்செயலாளராக கலைஞரின் கட்சிப் பணி என்கிற சுமையை பகிர்ந்து வருகிறார். ""காலை 7 மணிக்கெல்லாம் கட்சிக்காரர்களை சந்திக்க தயாராகிவிடுவது அவரின் பல வருட பழக்கம்'' என்கிறார் மூத்த உதவியாளர் நடராஜன்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பத்திரிகைகளுக்கு தனிப்பேட்டிகள் கொடுப்பதை தவிர்த்து வந்த  நிதியமைச்சர் அன்பழகன் நக்கீரனிடம் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தினார். தனித்தமிழ் ஆர்வத்தால் இராமையா என்கிற தன் இயற்பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டவரின் பேச்சு முழுவதும் உரைநடைத் தமிழாகவே அமைந்திருந்தது. அவர் பேட்டியிலிருந்து...

நக்கீரன்: முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் களத்தில் வேலைகளை தொடங்கிவிட்டது.  தி.மு.க. தயாராகிவிட்டதா?

பேராசிரியர்: தி.மு.க. எப்பொழுதும், எந்த நேரத்திலும் தேர் தலில் ஈடுபடக் கூடியதாகவே செயல் பட்டு வருகிறது. அது நாளும் இயங்கிக் கொண் டுள்ளதால் தேர்தல் பணியை யும் அதே போக்கில் அது மேற்கொள்ளும். தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்த லுக்கான சில சடங்குகள் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவுங்கூட அமைப்பு ரீதியாக இயங்கும் கழகத்திற்கு கடினமானதல்ல.

ஆனால் நீண்ட ஓய்விலோ, செயலற்ற நிலையிலோ, உறக்கத்தில் இருக்கக் கூடிய கட்சி, தேர்தல் வேலையைத் தொடங்கும்போதுதான் அது காண்பவருக்கு வேகமான செயல்போலத் தெரியும். ஓட்டப் பந்தயம் போன்ற தேர்தலில் ஈடுபடும் எவரும், புறப்பட்டவுடன் திடீரென்று வேகமாக ஓடிவிட முடியாது.

நக்கீரன்: 1989-க்கு பிறகு ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.தான் மீண்டும் வெற்றி பெறும் என்கிற உங்கள் கருத்துக்கு நீங்கள் வைக்கும் அழுத்தமான காரணங்கள் எவை?

பேராசிரியர்: 1989-க்கு பிறகு ஆளுங்கட்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே எனினும், அதுவேதான் தொடரும் என்று கூறக் காரணமில்லை.

எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், அந்தக் கட்சி ஆட்சியினை மக்கள் வெறுப்பதற்கோ, அன்றி அதை எதிர்க்கும் கட்சித் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கோ, போதுமான காரணம் இருந்தால்தான் ஆட்சி மாற்றம் நிகழும். மக்கள் ஒரு ஆட்சியை வெறுத்தால்தான் மாற்றம் வரும்.

அந்த வகையில் தி.மு.கழக ஆட்சியில் கலைஞர் நிறைவேற்றியுள்ள சாதனைகள், தமிழ்நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் ஏதேனும் ஒருவகையில் தொட்டிருக்கிறது. அரிசிச் சோறு சாப்பிடுவோர் எவரும், ஆடை உடுத்துவோர் அனை வரும், வாழும் ஆசை கொண்டோரும், மக்களைப் பெற்றோரும் ஆகிய எல்லோரும் இந்த அரசு செய்துவரும் சமூகநலத் திட் டங்கள் பலவும் தொடர்ந்திட வேண்டும் என்றுதான் விரும்பு வர். அப்படித் தொடரச் செய்வதற்கு, யார் இன்று ஆள்கின் றார்களோ அவர்கள் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தான் விரும்புவர். எதிர்த்து நிற்கும் கட்சியின் கடந்த கால சாதனை எப்படிப்பட்டது என்பதையும் மக்கள் மறந்துவிட மாட்டார்கள். நினைவு ஆற்றல் இழக்காத எவரும், அந்த ஆட்சியில் நடைபெற்ற அராஜக, சட்டவிரோத நடவடிக்கை களை மறந்திருக்க மாட்டார்கள். நினைத்தாலும் கனவிலே கண்டாலுங்கூட கதிகலங்கச் செய்யும் அப்படிப்பட்ட தலைமையை ஆதரித்திடும் அளவு, மனங்குழம்பியோராக இல்லை மக்கள்.

நக்கீரன்: உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் அடிக்கடி கூட்டணி குறித்த எதிர்ப்புக் குரல்களை கேட்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா?

பேராசிரியர்: வெளியில் பொதுக்கூட்டத்தில் கேட்கும் எதிர்ப்புக் குரலோ அல்லது அறைகூவலோ எதுவாயினும், அந்தக் கட்சியில் அவர்கள் இருப்பதைமேலிடம் கவனிக்க வேண்டும் என்பதற் காகத்தான். வேறு நோக்கமெனில், தங்களுடைய கட்சிக்குள், தங்கள் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்குத்தான், தங்கள் தேசியக் கட்சியின் ஒட்டுமொத்த நலனை மறந்தவர்கள்தான்... தனிவழி தேடுவார்கள். சிலருக்கு அதுவே அவர்தம் பாரம்பரிய மரபுரிமையாகவும் இருக்கலாம்.

நக்கீரன்: நானே அமைச்சராக இல்லா விட்டாலும் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என்று பேசியிருக்கிறீர்களே. எதிலும் உணர்ச்சிவசப்படாத நீங்களே இப்படி பேச என்ன காரணம்?

பேராசிரியர்: நீண்ட காலமாக முதல்வராக உள்ள கலைஞர் காலத்தில் அவருடன் அமைச்சராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளவனாக இருப்பதால், தொடர்ந்து அவருடன் இருந்து வந்துள்ளதால், ஒருவேளை நான் அமைச்சராக இல்லாத நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாமே தவிர, தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சி தொடரும் என்று வலியுறுத்திக் கூறுவதற்காகவே அப்படிச் சொன் னேன்.

நக்கீரன்: அரசியல் என்பது வியாபாரம்      தான் என்றும், பெரிய கட்சிகள்தான் அரசியலை வியாபாரம் ஆக்கியது என்றும் குற்றம் சாட்டுகிறார் டாக்டர் ராமதாஸ். இதை நீங்கள் ஏற்கிறீர்களா?

பேராசிரியர்: அரசியலில் வியாபாரமும் இருக்கலாம். அரசியல் முழுவதுமே வியாபாரம் அல்ல. அப்படி நடத்தினால் அது நீடிக்காது. பெரிய கட்சிகள் வியாபாரம் ஆக்கி இருந்தால் அப்படிப்பட்ட கடும் குற்றம் செய்த கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டார் டாக்டர் இராமதாசு என்று கருதுகிறேன். ஒருவேளை அவர் கூட்டு சேர்ந்தால், இது எப்படி? வியாபாரம் ஆகாதா, என்று எவராவது கேட்டால், இது சில்லரை வியாபாரம் என்றும் அவர் கூறலாம்.

நக்கீரன்: அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் கலைஞர் என்கிறாரே ராமதாஸ்?

பேராசிரியர்: கலைஞர், அன்புமணிக்குச் சீட்டு தருவதாக ஒப்புக்கொண்டு கொடுத்த கடிதத்தின்படி, அந்த நாள், இன்னும் வர வில்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும், யாரும் நம்பிக்கை     துரோகம் செய்ய இடமில்லாமல் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் வருகிற ராஜ்யசபா இடந்தான் அவ ருக்குத் தருவதாகத் தெரிவிக்கப் பட்டது.

கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பதவி எதையும் எங்கள் குடும்பத்தில் உள்ள எவரும், எப்போதுமே ஏற்கமாட்டோம் என்பது உறுதி; தவறினால் எங்கேயோ நிறுத்தி, எதனாலோ, எவர் வேண்டுமானாலும் அடிக்க   லாம் என்றவருக்கு, இது எப்படி ஏமாற்றம்  ஆகலாம்?

நக்கீரன்: பொதுவாக இன்றைக்கு கொள்கைப் பிடிப்போடு அரசியலுக்கு வருபவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனரே, ஏன்?

பேராசிரியர்: இன்று திராவிடர் கழகம் போன்று அரசியலில் ஈடுபடாத இயக்கத்தைத் தவிர்த்து,  கட்சி எதுவானாலும் அரசியலில் பங்கேற்க வேண்டிய நிலையே உள்ளது.

அரசியல் என்பது கட்சிகளின் போட்டி அடிப்படையிலான அரசியலாகவும், அது ஒன்றை ஒன்று வெல்லவும், வீழ்த்தவும் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் உள்ளதால் தனிப்பட்டதொரு இயக்கத்தின் மூலக்கொள்கை உணர்வு ஏற்படுத்தும் நோக்கம் முக்கியத்துவம் பெற   வில்லை.

சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, ஆட்சி அமைப்பில் மகளிருக்கு உரிய இடம், சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியினர் இடம்பெறும் வாய்ப்பு ஆகியவையே இளைஞர்களின் கவனத்தில் இடம்பெறுகின்றன. இதுவும் அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானதொரு நிலையே.

ஜனநாயக நடைமுறையில், உள்ளாட்சி மன்றங்களிலோ, நாடாளும் அமைப்புகளிலோ, பல்லாயிரம் பேர் பதவிகளில் உள்ளதைக் காணும் இளைஞர்கள், அந்தப் பதவிகளை அடைவதுதான் அரசியலில் பங்கேற்கும் வாயில் என்று மயங்குகின்றனர்.

பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் தனது ஆசிரியரைப் பார்த்து, அவரைப் போல தானும் ஓர் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதை ஒத்ததே அது.  என்றாலும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன் எடுத்துச் செல்லும் வாய்ப்பும், தேவையும் குறைகின்றது.


நக்கீரன்: உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், அகல் விளக்காகத் தோன்றிய சுயமரியாதை இயக்கம், படிப்படியாக மண் எண்ணெய் விளக்கு, அரிக்கேன் விளக்கு என்று வளர்ந்து இறுதி யில் அதிக வெளிச்சம் தரக்கூடிய கேஸ் விளக்கான தி.மு.க.வாக வளர்ந்தது. அந்த வளர்ச்சி இப்போதும் இருக்கிறதா?

 
பேராசிரியர்:
பிறவி இழிவு துடைக்கும் உணர்வை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம், தீண்டாமையை ஒழிக்கவும், ஆண்-பெண் சமத்துவச் சமுதாயம் காணவும் வழிகண்ட பகுத்தறிவு இயக்கம், மொழி, கலை பண்பாட்டு வழியில் சமுதாய எழுச்சி ஏற்படுத்திய, இன உணர்வு இயக்கம் (திராவிடர் கழகம்), இன உரிமை காத்திடவும், சமூக நீதி வளர்த்திடவும், ஜன        நாயக அரசியலில் பங்கேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் என்று, தமிழகத்தில் திராவிடர் இயக்கம் பெற்ற வளர்ச்சி நிலைதான் அதிக வெளிச்சம் பரப்பும் "கேஸ் லைட்' நிலை என்று நான் குறிப்பிட்டு பேசினேன். ஒரு கொள்கை வழிப்பட்ட இயக்கம் பெறக்கூடிய வளர்ச்சியைப் பெற்ற  விவரம் அது.


ஜனநாயகத்தில் பங்கேற்று, தேர்தலில் ஈடுபட்டு, பல ஆண்டுகள் ஆட்சியிலும் அமர்ந்த நிலையில், இயக்கத்தின் கொள்கை வழியில் சாதனைகளைச் செய்து சமுதாயத்தை முன்னேற்றி, வறுமையைப் போக்கி, வளமான வாழ்வை அளிக்க முற்படுவதும், அவ்வகை சாதனைகள் தொடர்ந்திட தேவையான வெற்றியை ஜனநாயக முறையில் காண்பதுமே "கேஸ் லைட்' வெளிச்சம் அணையாமல் காப்பதுதான். அந்த வளர்ச்சியைக் காப்           பது தான் இன்று திராவிடர் இயக்கம் ஆற்ற வேண்டிய கடமையாக உள்ளது. அது கலைஞரின் தலை       மையில் தி.மு.க. ஆட்சி தொடர்வதன் மூலம் நிலைக்கும், வளரும்.

நக்கீரன்: இளைய தலைமுறையினரைக் கவர தி.மு.க. தவறிவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

பேராசிரியர்: இளைய தலைமுறையின் நோக்கும் போக்கும், சிந்தனையும் செயற்பாடும், காலத்திற்குக் காலம் வேறுபடும். சுதந்திரம் கிடைக்குமுன் வளர்ந்த விடுதலைப் போராட்ட வேகமும், மக்களிடம் இருந்த தேசப்பற்றும், கற்பித்துத் திணிக்கப்பட்ட சமுதாயப் பிறவி இழி காரணம் காட்டி ஏற்படுத்தி இருந்த தடைகள் தகர்க்கப்பட்டு, முன்னர் நம்மிடம் இருந்த சுய மரியாதைக் கொள்கை வேகமும், தீண்டாமையின் நச்சுப் பல் பிடுங்கப்படுவதற்கு முன் இருந்த சமத்துவம் காக்கும் வெறியும், இன்று இருக்க இயலாது.

அதனால் அப்படிப்பட்ட போராட்ட இயக்கங்கள் இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் வெகுவாக குறையத்தான் செய்யும். மேலும், கல்வி வாய்ப்பு பெருகி வரும் சூழலில் கல்வி பெறுவதன் அருமையை எண்ணி ஏக்கம் அடையும் நிலை குறைவதால் கலைகளிலும், கேளிக் கைகளின்பாலும் அவர்கட்கு ஈடுபாடு மிகுவது இயல்பே. இளைஞர்களை ஈர்ப்பதில் வேறு எந்த அரசியல் கட்சியை விடவும், தி.மு.க. பின்னிட்டதாகக் கருத இடமில்லை. ஜனநாயகத்தில் பல்வேறு ஆட்சி அமைப்புகளில் இடம் பெற்ற நடுத்தர வயதினர் மிகுதியாக உள்ளதால், கழகத்தில் இடம் பெற்றுள்ள இளைஞர் கூட்டம் எடுப்பாகத் தெரியவில்லை. எனினும், கழக இளைஞர் அணி அந்தக் குறையும் ஏற்பட இடந்தராது செயல்படுகிறது. உலகம் முழுவதுமே, உயிர் வாழுகின்ற இளம் வயதினரை விடவும் முதிர்ந்த வயதுடைய மாந்தர் விகிதம் மேலும், மேலும் உயர்ந்து வருவதன் இயல்பான தாக்கம், அனைத்துத் துறைகளிலும் காணப்படும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை.

நக்கீரன்: இலவசத் திட்டங்கள் மூலம் மக்களை சோம்பேறிகளாக்குவதாக சில அறிவுஜீவிகள் கூறுகிறார்களே?

பேராசிரியர்: இல்லாதாருக்கும், இயலாதாருக்கும், வாய்ப்பு வசதி அற்றோருக்கும் துணையற்றவருக்கும், கதியற்றவருக்கும் பயன்படவே ""இலவசம்''. அவர்கள் உழைக்காதவர்களோ, உழைக்க மறுப்பவர்களோ, உழவையும், உழைப்பையும் இழிவாக எண்ணுபவர்களோ அல்ல.

தலைமுறை பலவாக உழைத்து வாழும் குடும்பங்களில், ஒவ்வொரு வகையில் அவர்தம் வாழ்வில் மகிழ்ச்சி விளையவும், ஓய்வில் உற்சாகம் தோன்றவும், அவர்களது உழைப்பு நிறைவான பலன் விளைவிக்கவும் ஏதுவாகவே இலவசங்கள் அளிக்கப் படுகின்றன. தக்க காரணகாரிய விளக்கமின்றி இலவசங்கள் வழங்கப்படவில்லை. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி -ஏழை வீட்டினர் பொழுதுபோக்குக்கும், பொது அறிவு வளர்ச்சிக்கும் பயன்பட.

கியாஸ் அடுப்பு இணைப்புடன் வழங்குவது, எரிபொருளாக விறகு பயன் படுவதைத் தவிர்க்கவும், சுற்றுச் சூழல் செம்மையுறவும், தாய்மார்கள் அடுப் பூதும் தொல்லை தவிர்த்திடவும் உதவுகிறது.

கருவுற்ற தாய்மார்கட்கு -மகப் பேறு எய்துவதற்கு முன்னும் பின்னு மாக 6 மாதங்களுக்கு ரூ.6000        உதவித் தொகை அளிப் பது, அவர்கள் வயிற்றில் வளரும் சிசு, ஊனமோ, உடல்-மூளை வளர்ச்சிக் குறையோ எய்தாமல், நோய் நொடி வாராது தடுக் கும் நோய் எதிர்ப்பு சக்தி யுடன் பிறப்பதற்காக.

திருமண உதவித் தொகை ரூ.25,000 ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வயது வந்த பெண்ணுக்கு வாழ்வு கிடைக்கவும், பெற்றோரின் பெருங்கவலை யை மாற்றவுமே அது மறைமுகமாக- தற் கொலைகளையும், ஏக்கத்தையும் தவிர்க் கிறது. முதியோருக்கு, விதவைகட்கு, மாற்றுத் திறனாளிகட்கு வழங்கும் உதவித் தொகைகள்- அவர்களின் அன்றாட உணவுக்கு உதவ.

அங்கன்வாடியில் சேய்கட்கும், பள்ளிகளில் மாணவர்கட்கும் சத்துணவு, வாரம் 5 முட்டை அல்லது வாழைப்பழம் ஆகியவை இலவசமாக வழங்குவது வருங்காலத் தலைமுறை, நோய் நொடிக்கும் பெரும் பிணிக்கும் ஆளாகாமல் வாழச் செய்வதற்காக.

முதியோருக்கு இலவச வேட்டி, புடவை- அந்த ஏழை களின் மானம் காத்திட, சமுதாயத்தில் அவர்கள் தன்மா னத்துடன் உலவ தரப்படுகிறது.

படிக்கும் மாணவ- மாணவியருக்கு பள்ளிக் கட்ட ணம் இல்லை. புத்தகம் இலவசம். தேர்வுக் கட்டணமும் இல்லை. இலவச மிதிவண்டி, இலவச பேருந்து பயணம். ஆதிதிராவிட பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்கட்கு இலவசமாகத் தங்கிப் படிக்க விடுதிகள் ஏற்படுத்துவது அடித்தட்டு மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவே.

பொதுமக்கள் உயர்தர சிகிச்சை பெற வழிசெய்ய வேண்டி கலைஞர் உயர்சிகிச்சை உயிர் காப்பீட்டுத் திட்டம். ஒண்ணே முக்கால் கோடி குடும்பங்களில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் 4 ஆண்டுகட்கு ஒரு முறை, 1 லட்ச ரூபாய் அளவிற்கு சிகிச்சைக்கு உதவி பெறலாம்.

தமிழ்நாடெங்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் முன்னூறு வண்டிகள் ஓடுகின்றன. எந்த ஊரெனிலும் மக் கள் ஆம்புலன்சை அழைத்தவுடனே வந்து, அவசர சிகிச்சை கிடைக்க கட்டணமில்லா  மல் உதவுகின்றது. ஏழை, எளிய மக்கள் 108 அர்ச்ச னை செய்பவர்க்கு ஆண்டவனே வந்து உதவுவது போன்று, 108 ஆம்புலன்ஸ் வண்டி வருவ தாகக் குறிப்பிட்டு மகிழ் கின்றனர்.

அனைவருக்கும் தைப் பொங்கலுக்கு பொங்கல் பொருள்கள் யாவும் இலவச மாக வழங்கப்பட்டது -தமிழர்கள் அனைவருக்கும் பொங் கல் இன்பம் வாய்த்திட.

இந்த இலவசங்கள், மூன்றுவேளையும் இலைவிரித்து உணவருந்தி, அஜீரணத்திற்கு மருந்து சாப்பிடும் வர்க்கத்தாருக்குச் செய்யும் தானம், தருமம் போன்ற முறையைச் சேர்ந்தது அல்ல. அதனால் இது சோம்பேறிகட்கென்று ஏற்பட்ட திட்டமுமல்ல, சோம்பேறியாக வாழ்வதற்கு வழிசெய்யும் திட்டமுமல்ல.

தமிழக அரசின் இலவச திட்டங்கள் பல, அனாதைகட்கும், அபலைகட்கும் வாழ்வளிக்கும் திட்டமாகும். உயிர் வாழ்வதில் வெறுப்படையாமல் நம்பிக்கைகொள்ளச் செய்யும் திட்டங்களாகும்.

ஒவ்வொரு இலவச திட்டமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாழ்வைச் செழிக்க வைப்பது. இந்த இலவசத்திற்காகச் செலவிடும் தொகை அளவுக்குக் கிடைக்க வேண்டிய உடனடி பலன் மட்டுமன்றி, நீண்டகாலத்திற்குப் பல நற்பலன்களைச் சமுதாயத்திற்கு விளைவிக்கிறது.

அதனை சொல்லிக்கொண்டே  போகலாம்.

நக்கீரன்: கலைஞரை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று திருச்சி கூட்டத்தில் சபதம் போட்டிருக்கிறாரே ஜெ.?

பேராசிரியர்: கலைஞரை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று யார் பேசினாலும் அது பொருளற்ற பேச்சு. ஒருவேளை அவருடன் நட்பு கொள்பவராக இருந்தால், அவர் பேசியது பொருளுடையதாகலாம். கூலிக்குக் கொலை செய்பவர்களைத் தவிர, வேறு எவரும் இப்படிப் பேச நியாயம் இல்லை. ஜனநாயகத்தில், எதிரிகளைத் தேர்தலில் தோற்கடிப்பதால் கூட அவர்களை ஒழித்துக் கட்ட முடியாது என்பதே நிலைபெற்ற உண்மையாகும்.

நக்கீரன்: தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் முதல் நோக்கம் என்கிறாரே விஜயகாந்த்?

பேராசிரியர்: அவரது முதல் நோக்கம் தெரிந்ததற்கு நன்றி. அந்த நோக்கம் நிறைவேறுவதாகவே இருந்தாலும், தாம் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை அவரே ஒப்புக் கொள்வதால்தானே இப்படிப் பேச முடிகிறது. இந்த முறை அவர் உண்மை பேசியதற்கு எனது பாராட்டு.

நக்கீரன்: தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கூட்டு இயக்கம் நடத்தப்போவதாக சொல்கிறார்கள் இடதுசாரிகள். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

பேராசிரியர்: தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கூட்டு இயக்கம் நடத்தப் போவது யாராக இருந்தாலும், கழக அரசு, ஜனநாயக மரபின்படி யும், சட்டப்படியும்தான் எதிர்கொள்ளும்.

உரிய கருத்து விளக்கத்தின் மூலமே சந்திப்போம். மறவழி தூண்டப்பட்டால், காவல்துறையின் கையில் ஒப்படைப்போம்.

நக்கீரன்: பொதுவாக வாரிசுகள் அரசிய லுக்கு வருவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பேராசிரியர்: யாருடைய வாரிசாக இருந்தாலும், அவர் இந்த நாட்டுக் குடிமகனாக இருந்தால், அவர்களது உரிமையை யார் தடுக்க முடியும்? ஏன் தடுக்க வேண்டும்? தகுதி வாய்ந்த வர்கட்கு மகவாகப் பிறப்பது- பிறந்தவரின் குற்றமா?

வயது வராத வாரிசு என்றால், ஆணோ, பெண்ணோ யோசிக்கத்தான் வேண்டும். முப் பது, நாற்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடு பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, தேர்தல் களைச் சந்தித்து, பல நிர்வாகங்களை நடத்தி, நாட்டவர் வரவேற்கும் நிலை உள்ளவர்களை ""வாரிசு'' என்று அழைப்பதே அறியாமை. அப்படிப்பட்டவர் நாட்டு மக்களுக்கே வாரிசு ஆவர். ஆட்சியில் உள்ளவர்களின் உறவினர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று உலகில் எங்கேயாவது சட்டம் உள்ளதா? அப்படி ஒரு மரபாவது கடைப்பிடிக்கப்படுகிறதா?

வர்ணாசிரம தரும விதிகளில்தான் நால்வருணத்தாருள் நான்காவது வருணமான சூத்திரர்கட்கு எவ்வகையான சொத்து இருந்தா லும் அதை அவர்கள் உரிமை கொண்டாடக் கூடாது என்றும், அந்தச் சொத்திற்கு அவர்தம் மக்கள், வாரிசு உரிமை கொண்டாடக்கூடாது என்றும் விதி இருந்தது. அந்த விதி எல்லாம் இன்று மடிந்து, மக்கிப் போய்விட்டதே!

நக்கீரன்: நீங்கள் அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்த அரசியல் சூழலுக்கும் இப்போது இருக்கும் சூழலுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பேராசிரியர்: அறுபது, எழுபது ஆண்டுகட்கு முன்னர் தேசியமோ, திராவிட இயக்கமோ, சமதர்ம, பொதுவுடைமைக் கட்சிகளோ, எவ்வகைக் கொள்கையுடைய கட்சி ஆனாலும், அந்தக் கொள்கையை முன்னெடுத்து வைப்பதும், அதை விளக்கி விவரிப்பதும், அதற்கான காரண காரி யத்தை விளக்குவதுமே அக்காலத்திய தேவையாக இருந்தது. அவ்வகைப்பட்ட கொள்கை வழியை ஏற் றோர்தான் அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவர்.

இக்காலத்தில் வெற்றிபெறக்கூடிய கட்சி, விளம்பரம் தரக்கூடிய கட்சி, பதவி வாய்ப்புள்ள கட்சி, தொழில் நடத்தக்கூடிய வசதியுள்ள கட்சி என்னும் நோக்கில்தான் பலரும் கட்சியைத் தெரிவுசெய்து சேருகின்றனர். பொதுவாகவே அரசியல் கட்சிகளின் போக்கில், பொதுநலமும், இலட்சியமும் ஒதுக்கப்பட்டு, அவரவர்க்கு வாய்க்கக்கூடிய வாய்ப்பு -நாட்டமே மேலோங்கியுள்ளது.

இலட்சியத்திற்காகத் தொடுக்கப்படும் அறப் போராட்ட உணர்வுகள் மங்கிய சூழ்நிலையில், சமூக சமத்துவ நீதிக்காகப் போராட்டம் தேவைப்படாத காலகட்டத்தில், பிறவகை வேட்கைகள் மேலோங் கத்தான் செய்யும். அதன் விளைவாக கட்சிகளின் போக்கில் விறுவிறுப்பு குறைவதும் இயற்கையே.

நக்கீரன்: ஆறாவது முறையும் முதல்வராக  கலைஞர் பொறுப்பேற்பாரா? இதை நீங்கள் வலியுறுத்து கிறீர்களா?

பேராசிரியர்: தொலைநோக்கு, பட்டறிவு, நிர்வாக நிபுணத்துவம், திட்டமிடும் ஆற்றல், மாற்றாரை எடை போடும் திறன், ஜனநாயகத்தை நடை முறைப்படுத்தும் பரந்த நோக்கம், மானிட நேயம் ஆகியவற்றைப் பெற்றவராதலின் தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக ஆளும் கட்சியும் கை கொடுத்துத் தாங்கும் மைய அரசு நிலையாக நடைபெறவும், ஆறாவது முறை மட்டுமல்ல, ஏழாவது முறையும் கலைஞரே பொறுப்பேற்க வேண்டும் என்பதே என் விழைவு.

தமிழுணர்வுடன், மானிட நேயத்துடன் எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடப் பணியாற்றிக் கொண்டுள்ள கலைஞர், நாட்டு உணர்வு கருதுகின்ற அவரது உள்ளத்தின் உரத்தைப் போன்று அவரது உடல் நலமும் உரம் பெற்று, அவரே தமிழ்நாட்டின் முதல்வராகத் தொடர வேண்டும் என்பதே என் அவா!

நக்கீரன்: துணை முதல்வராக உள்ள திரு.மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து தி.மு.க. பொதுச் செயலாளரின் பார்வை என்ன?

பேராசிரியர்: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எதையும் நின்று நிதானித்து, உண்மை கண்டு உறுதியுடன் செயல்படுபவர். அவரிடம் பணியாற்றுவோரையும் அவ்வாறே செயற்பட வைப்பவர். காலம் கருதி இடத்தாற் செய்பவர். செய்தக்கதன்றி, தக்கதல்லாதவற்றைத் தவிர்ப்பவர். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான தகுதியும், திறமையும் அவருக்கு உண்டு.

சென்னை மாநகர மேயராக விளங்கி, நகரத்தின் தரத்தை உயர்த்தியவர். உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், கிராமங்கள் தோறும் நடைபெற்றப் பணிகளால் தமிழ்நாடே முன்னேற்றம் கண்டது. முதல்வர் கலைஞர் அவர்கள் எண்ணிய எண்ணியாங்கு எய்தும் ஆற்றல் வாய்ந்தவர் எனில், துணை முதல்வர், சொன்னது சொன்னவாறு நிறைவேற்றிக் காட்டும் செயல்திறன் மிக்கவர். நாட்டில் சுற்றிச் சுழன்றுவரும் அவரது தொண்டு தமிழ்மக்களின் ஒருமித்த பாராட்டுப் பெற்றதாகும்.

சந்திப்பு : கார்த்திகைச்செல்வன்
படங்கள் : ஸ்டாலின் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [4]
Name : sridhar Date :11/7/2014 12:40:51 PM
edirparpu kanavagivittathal sonna ysvaiyume krpanaithan
Name : subramani Date :7/26/2012 5:23:16 PM
அய்யா தங்களுக்கு இவ்வளவு வயதாகிவிட்டபின் தமிழ்நாட்டு மக்கள்மேல் என்ன கோபம்? '' ஆறாவது முறை மட்டுமல்ல, ஏழாவது முறையும் கலைஞரே பொறுப்பேற்க வேண்டும் '' என்று எங்களின் நிம்மதியை கெடுக்கிறீர்களே.
Name : illamaran Date :11/1/2010 12:01:47 AM
பேராசிரியர் அவர்கள் துணை முதல்வர் மு‍.க.ஸ்டாலின் அவர்களை பற்றி கூறியது‍ நூற்றுக்கு‍ நூறு‍ உண்மை.
Name : Abdul Date :10/23/2010 8:23:51 PM
ஒரே நோக்கம், ஒரே எண்ணம், ஒரே செயல், ஒரே கொள்கை என தன்மான தமிழராய் வாழும் எங்கள் இனமான பேராசிரியர் அவர்களின் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் வள்ளுவரின் வரிகள் போன்றவை. வாழ்த்த வயதில்லை, தங்களை போற்றி வணங்குகிறேன். நக்கீரன், தமிழர் பத்திரிக்கை என்பதை எப்போதும் நிரூபிக்கிறது.