நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :27, டிசம்பர் 2010(15:56 IST)
மாற்றம் செய்த நாள் :27, டிசம்பர் 2010(15:56 IST)
தனக்குவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா 
          ராசகோபாலன் என்னும் இயற்பெயர் கொண்ட... தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்த... உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினை ( நவம்பர் 23)  தமிழக அரசு,  அரசு விழாவாக எடுத்து சிறப்பித்தது.  அதனையொட்டி அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற நடத்தினார். இவ்விழா சென்னை அண்ணாசலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 

சுரதாவின் 28 நூல்களுடன் சுரதாவின் மகன் கல்லாடன் எழுதிய ‘கனவின் சாம்பல்’ மற்றும் சுரதாவின் மருமகள் ராஜேஸ்வரி கல்லாடன் எழுதிய ‘மௌனமும் பேசும்’ ஆகியன உட்பட 30 நூல்களையும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது. இந்த நூல்களை நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட நல்லி குப்புச்செட்டியார் சார்பில் பொதிகை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் நடராஜன் பெற்றுக்கொண்டார். 

மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றால், சுப்புரத்தினம் என்னும் தனது இயற்பெயரை ‘பாரதிதாசன்’  என மாற்றிக்கொண்டார் பாவேந்தர்.அவரின் மீது கொண்ட பற்றிதலினால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை ‘சுப்புரத்தின தாசன்’ என்று மாற்றிக்கொண்டவர் சுரதா. இவரின் பெற்றோர் திருவேங்கடம், செண்பகம் அம்மையார். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாச்சல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்று, தமிழுக்கு தன் எழுத்துக்களால் மணிமகுடம் சூட்டிய சுரதாவின் இந்த 90 வது பிறந்த நாள் விழாவில்... சீர்காழி கோ.சிவசிதம்பரம் சுரதாவின் மூன்று பாடல்களை பாடி தனது குரலால் சுரதாவிற்கு சிறப்புச் சேர்த்தார். 

நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், குமரி அனந்தன், கவிஞர் வாலி, கவிஞர் கலி.பூங்குன்றனார், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உவமைக் கவிஞரின் பல உவமைக் கவிதைகளை எடுத்துக்காட்டாக கூறி வாழ்த்தியவை  சுரதாவுக்கு உவமையில்லா வாழ்த்தாக அமைந்தன. 

தன் பெயரை நிலைநாட்டிய கவிஞர் - முனைவர் மு.பி.பா :

தமிழ் சான்றோர் பலர் நிறைந்த இவ்விழாவில் சுரதாவை பற்றி நான் கூறித்தான் தெரிய வேண்டிதில்லை. சுரதா தமிழுலகம் அறிந்த ஒப்பற்ற கவிஞர்.

சுரதாவின் உவமை ஆளுமை சாலச்சிறந்தது. அவர், ‘இடுகாடு’ பற்றி கூறும் கவிதையில்,

“இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை - ஆனால்
 இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை...  என்று பளிச்சென்று மனதில் பதியும்படி கூறியிருப்பார். இப்படி சுரதாவின் எத்தனையோ கவிதைகளை அவரின் சிறப்பாக கூறிக்கொண்டே போகலாம்.  சுரதாவைப்பற்றி அனைவரும் நன்கறிவோம் என்பதால் அவரின் மகன், மருமகள் ஆகிய இருவரைப்பற்றி கூறலாம் என நினைக்கிறேன். 

சுரதாவின் மகன் கல்லாடனும் சிறந்த கவிஞர் என்பது அவரின் ‘கனவின் சாம்பல்’ என்னும் நூலை படிக்கும்போது உணர முடிகிறது. அதேபோல்தான் ராஜேஸ்வரி கல்லாடனும். ராஜேஸ்வரி கல்லாடன் எழுதியிருக்கும் ‘மௌனமும் பேசும்’ எனும் நூலில் தனது கணவர் கல்லாடன் பற்றி குறிப்பிடும்போது,

ஒரு புள்ளியான நான் -
வெள்ளியாக வெளிச்சமிட 
அவரே காரணம் - ஆம் 
என் கணவர் கல்லாடனே காரணம்... என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரின் நூலுக்கும் அணிந்துரை எழுதியிருக்கிறார் வாலி, ராஜேஸ்வரியின் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் ‘என் மகள்போன்றவர்’ என்று வாலி குறிப்பிட்டுள்ளார்.அது அவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.

பாரதிதாசனின் மீது கொண்ட பற்றால் வைத்துக்கொண்ட சுப்புரத்தின தாசன் என்னும் பெயரை சுரதா என சுருக்கிக்கொண்டு நூல்கள் எழுதிய காலத்தில், சுரதா என்றப் பெயர் புலக்கத்தில் பிரபலமாகுமா என்று பலரும் அவரிடம் கேட்டதற்கு,“ நிச்சயம் புகழடையும். அதை நிகழ்த்திக் காட்டுகிறேன்” என்றார். அதே போல் சுரதா என்றப் பெயர் தமிழ் உலகில் தனித்த நின்று சிறப்படைந்துவிட்டது.

சுயமரிதை மிக்க கவிஞர் சுரதா - கவிஞர் கலி.பூங்குன்றன் :

சுரதா சுயமரியாதை மிக்கவர்.  அவரிடம் ஒரு நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு கணிப்பொறியிலிருந்து பதில் வருவது போல் துரிதமாகவும் துள்ளியமாகவும் பதிலளித்திருக்கிறார்.

உங்களுக்கு மிகவும் பிடித்த கட்சி ?

திராவிடம்.

யாரையும் பின்பற்றாததன் காரணம் ?

நான் நாத்திகன். நான் பெரியார் வழியில் நடப்பவன். கவிதை  என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும் தோறும், பழகும் தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சிப் பெற்றவனாகிறான்.
 
பிடித்த கடவுள் ?

அப்படி ஒருவர் இருந்தால் தானே.

இவ்வாறு சுயமாரிதை சிந்தனையுடன் பதிலளித்துள்ளார் சுரதா.

உரை நடையைப் பற்றிக்கூறும் போது, “உரை நடை - பசிக்கு சோறு” என்கிறார்.

நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள் ? என்ற கேள்விக்கு,
இது நீ ஏன் உயிர்வாழ்கிறாய் என்று கேட்பது போலிருக்கு. என்று பதிலளித்திருப்பார் சுரதா. குறைந்து வரும் புத்தகம் படிக்கும் ஆர்வம் - சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் :

சுரதாவின் ‘அமுதும் தேனும் எதற்கு’ என்ற அருமையான பாடல் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்னும் இனிமையாக இருக்கும். இந்தப் பாடல் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். சுரதா தஞ்சாவூர் பகுதிக்காரர் என்பதால், இன்னும் அவர் எனக்கு நெருக்கமானவராக தெரிந்தார். மருதுபாண்டியர்கள் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்கவர்கள் குறித்த அரிய தகவல்களை ஆவணப்படுத்தி புத்தகமாக்கியிருக்கிறார் சுரதா. அற்புதமான கவிதைகள், ஆவண நூல்கள், சிறுகதை என பல்துறையின் வழியில் தமிழுக்கு தொண்டாட்டிருக்கிறார் சுரதா.
  
இனிவரும் தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்குமா என்பது சந்தேகம்தான். நான் ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன். எனது மறைவுக்கு பிறகு எனது பிள்ளைகள் அவற்றை எல்லாம் குப்பை என்று ஒதுக்கிவிடுவார்கள். 

சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் நான் பேசிய
கன்னிப் பேச்சின் போது, “அரசு சார்பில் நூல்கள் 
வாங்கும் போது, 500 படிகள் வாங்கப்பட்டு வருவதை, 1500  படிகளாக உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன். இந்த எனது பேச்சை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை ஏற்று 1000 படிகள் வாங்குவதற்கு வழிவகுத்தார் கலைஞர்.   

புத்தகம் உருவாக்கும் தனிப்பட்ட எழுத்தாளரின் நலனுக்காக,  எழுத்தாளர் உரிமம், வெளியிடல், விநியோகித்தல் போன்ற பலவற்றில் ஒரு நெறிமுறையை வகுத்து கொள்கையாக வரையறைப்படுத்துதலை மத்திய அரசு செய்கிறது. இதை மாநில அரசும் செய்யவேண்டும்.  

இன்றைய காலகட்டத்தில் சில தனியார் பதிப்பகங்கள்தான் தொடர்ந்து புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றன. பல சிறு பதிப்பகங்கள் பொருளாதாரச் சிக்கலால் நசிந்துவிட்டன. நல்ல புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட, "மாநில புத்தக ஆதரவுக் கொள்கை" ஒன்றை எழுத்தாளரும், தமிழ் காப்பாளருமாக இருக்கும் முதல்வர் கலைஞர் ஏற்படுத்த வேண்டும் என, நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர் தலைமையேற்றுள்ள இந்த விழாவில் இதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். இந்தப் புத்தக மேம்பாட்டுக் கொள்கை மூலம் ஏராளமான நல்லப் புத்தகங்களை வெளியிட அரசு உதவ வேண்டும்.

சுரதா தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம் - பேராசிரியர் க.அன்பழகன் : 

அந்தக் கவிஞரை(சுரதா) பற்றி இந்தக் கவிஞர்(வாலி) கூறியது அருமை. நாத்திகக் கவிஞரை ஆத்திகக் கவிஞர் படம் பிடித்துக்காட்டிவிட்டார். இலக்கியச்செம்மல் குமரி அனந்தன் கூறியது போல் சுரதாவின் கவிதைகள் அருகில் இருக்கையில் அமுதும் தேனும் எதற்கு.

சுரதாவை எனக்கு 47 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் சுரதாவை பற்றிய நினைவுகளை சுரதாவைப் போல உவமை காட்டி என்னால் பேச இயலாது. வாலியைப் போல் ஆழ்ந்த கவிதை அனுபவிப்புடன் சுட்டிக்காட்டவும் தெரியாது.அந்தத் திறன் எனக்கு வாய்க்கவில்லை.

நான் உணர்ந்த வகையில் சுரதா, ஒரு சுயசிந்தனையாளர். பாரதிதாசனிடம் பழகி அவர் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும் தான் யாரையும் முன் உதாரணமாகக் கொள்ளவில்லை எனக் கூறியவர். அதன்படியே தனக்கென ஒரு தனி நடையை உருவாக்கி அதன் வழியில் தன் படைப்புகளை பரவவிட்டவர்.
 
நாத்திகம் ஆன்மிகம் என்ற இரண்டையும் கடந்த நிலையில் மனித மாண்புகளைப் போற்றியவர். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது அன்பு,அறிவு ஆகியவற்றைவிட அவர் ஒழுக்கத்தைத்தான் அதிகமாக நம்புவது தெரிகிறது. அதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர்.

தமிழில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். ஆனாலும், புதுக்கவிதை எனப்படுவது எண்ணங்களின் வெளிப்பாடுதான். அது கவிதை அல்ல என்றும் புதுக்கவிதையைச் சாடுகிறார். 

ரவிக்குமார், வருங்காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்காது என்றார். நிச்சயம் புத்தகங்களுக்கான மதிப்பு எந்தக் காலத்திலும் குறையாது. தமிழை படித்தவர்களால் ஆங்கிலத்தையும் ஆள முடியும். ஆங்கிலத்தின் மூலம் பிழைப்பு நடத்திவந்தாலும் தமிழன் தன் தாய்மொழியை விட்டுவிடமாட்டான். தமிழ்மீது பற்று கொண்ட ஒரே ஒருவன் இருந்தாலும்கூட போதும் தமிழ் தழைத்தோங்கி வளர்ந்துவிடும்.

தமிழ் மொழி இப்போது இருப்பதை விட சொல்லளவில், பொருள் அளவில், வடிவத்திலும், நவீன காலத்திற்கேற்ற வகையில் தன்னை வளப்படுத்தி வளர்ந்து விடுமே ஒழிய, தமிழ் என்றும் அழிவதில்லை.   தமிழ் மொழியில் இருப்பது போல் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கிய, இலக்கண வளம் கொண்ட நூல்கள் எந்த மொழியிலும் இல்லை. வடமொழியில் மிகப்பழமையான இலக்கிய எடுத்துக்காட்டுக்கு காளிதஸன் மட்டுமே உண்டு. ஆனால் தமிழில் அப்படி இல்லை, தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை என எத்தனையே இலக்கியச் செல்வங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அத்தகைய தமிழுக்கு தொண்டாற்றிய சுரதாவின் எண்ணங்களும் எழுத்துகளும் தமிழ் மொழியின் ஏற்றத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்படும். தமிழ்ப்பற்று, இனப்பற்று, இலக்கியப்பற்று மிகுந்தவர்களுக்கு சுரதாவின் புத்தகங்கள் வரப்பிரசாதமாக அமையும். தொகுப்பு :~ நா. இதயா ,  ஏனாதி...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : வாலிதாசன் Date :6/22/2013 11:44:06 AM
சுரதா காலகாலத்திற்கும் நிற்கும் அவரின் உவமையைப்போல் நிற்பார் இலக்கியத்தளத்திலும் இனியதமிழர் உள்ளத்திலும் என்பதே உண்மை, மனசுக்குபிடித்தமான உவமைகள்தாம் எத்தனையெத்தனை....
Name : கவிஞர்இரவிச்சந்திரன் Date :10/29/2011 10:01:14 PM
என் புதுக்கவிதைகளைப் படித்துவிட்டு அதன் உருவகம் உவமானத்தில் லயித்த சுரதா கண்ணதாசனின் வனவாசம் நூலை புதுக்கவிதையில் எழுத எனைப் பணித்தார் அவர் அணிந்துரையோடு சிறுகூடற்பட்டிசிந்தனையாளன் என்ற நூலை வெளியிட்டது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்
Name : sharmila Date :12/16/2010 3:49:59 PM
சுரதாவின் பாடல்