நக்கீரன்-முதல்பக்கம்
நிகழ்வுகள்

பண்பாட்டு படையெடுப்பை தடுப்போம் : கி வீரமணி
.....................................................................
மனிதர்களின் மான்பை காத்தவர் கிருஷ்னய்யர்
.....................................................................
கருப்பினப் போராளி அலி!
.....................................................................
மாவலி பதில்கள்! - 77
.....................................................................
கோலாலம்பூர் _ சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு!
.....................................................................
இயற்கையை அழித்து வருகிறோம்
.....................................................................
மறைக்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி!
.....................................................................
கவிஞர் அவை நாயகனின் 2 மொழிபெயர்ப்பு நூல்கள்
.....................................................................
மாயாவி அரசியலை எதிர்ப்போம்!'' -சின்னகுத்தூசி விழா
.....................................................................
‘லீ’டர்…!இப்படியொரு தலைவர்...
.....................................................................
பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளித்த விழா!
.....................................................................
‘எழுத்தாளர்களுக்கு துணை நிற்போம்’ - நல்லகண்ணு
.....................................................................
கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா
.....................................................................
சென்னையில் திருவையாறு!
.....................................................................
“டாப் சிலிப்” சிகரத்தின் சிற்பி “ஹியூகோ வுட்”
.....................................................................
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம்
.....................................................................
பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
.....................................................................
’சாரல் விருது -2014’ விழா
.....................................................................
இளையராஜா-வைரமுத்து : என்னதான் பிரச்சனை?
.....................................................................
பாலம் புத்தக நிலையத்தின் நூல் விமர்சன கூட்டம்
.....................................................................
'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை' விருது விழா!
.....................................................................
சென்னை புத்தகச் சங்கமம் - சிறப்பு வீடியோ!
.....................................................................
எனக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு- கவிஞர் வாலி
.....................................................................
எது இலக்கியம்? அருட்தந்தை ஜெகத்கஸ்பர் பேச்சு!
.....................................................................
புத்தகத் தினம் - சிறப்பு பேச்சு
.....................................................................
புத்தகமும் புதுமை பெண்களும்! கவிஞர் ஜீவி பேச்சு!
.....................................................................
வைரமுத்து நாவலுக்கு இலக்கிய சிந்தனை விருது!
.....................................................................
கோவி.லெனினுடன் ஒளிவண்ணன் கலந்துரையாடல்
.....................................................................
முள்ளிவாய்க்கால் கொள்ளிவாய்க்காலாய் மாறிப்போச்சு
.....................................................................
காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதைப்போர்
.....................................................................
உலகின் முதல் நூல் திருக்குறள் - ராஜாராம்
.....................................................................
புத்தக கண்காட்சியில் கவிக்கோ பேச்சு!
.....................................................................
கவிஞர் நந்தலாலாவிற்கு கவிராசன் பாரதி விருது
.....................................................................
‘கவிக்கோ அப்துல்ரகுமானின் பவள விழா
.....................................................................
சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா!
.....................................................................
'அசோக மித்திரன் 82'
.....................................................................
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்: கலைஞர்
.....................................................................
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
.....................................................................
திருநங்கையர் வாழ்வு,போராட்டம் பற்றிய புத்தகம்!
.....................................................................
என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ
.....................................................................
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாண்டவர் குழிகள்!
.....................................................................
ஹாட்ரிக் பெரியார்!
.....................................................................
சத்தமாக பேசப்படும் மௌனங்கள்
.....................................................................
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
.....................................................................
வெயிலுக்கு ஒரு மரம்...! - நக்கீரன் ஆசிரியர்
.....................................................................
பாரதியை போற்றுவோம்
.....................................................................
தமிழ் நாட்டுக்குத் தனிக்குடியரசு - பழ. நெடுமாறன்
.....................................................................
தமிழ்நாடு எல்லைப் போராட்டம் ஒரு சோக வரலாறு
.....................................................................
ஏன் இந்தக் காகிதம் செய்தோம்...? - எழுத்தாளர் தேவபாரதி
.....................................................................
மத்தியில் அதிகாரக் குவிதல் ஆபத்து - க.அன்பழகன்
.....................................................................
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள் -அருள்மொழி
.....................................................................
சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்...!
.....................................................................
ஈழ விடுதலைக் களம்...
.....................................................................
தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி
.....................................................................
உவமை இல்லா உவமைக் கவிஞர் சுரதா
.....................................................................
மறைந்தும் மறையாத மாணிக்கம் ஜெமினி கணேசன்
.....................................................................
உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழர்கள்
.....................................................................
வாலிப கவிஞர் வாலி ‘80’ விழா - சிறப்பு தொகுப்பு
.....................................................................
நக்கீரன்ஆசிரியருக்கு தமிழ்சங்கத்தினர் பாராட்டுவிழா
.....................................................................
பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல்வெளியீடு
.....................................................................
பிறைசூடனுக்கு கலைஞர் விருது! -திருமா வழங்கினார்.
.....................................................................
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது ஏன்?பெரியார்தாசன்
.....................................................................
ஒப்பாரி லெட்சுமியம்மா:ஆவணப்படம்
.....................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் :30, டிசம்பர் 2010(13:32 IST)
மாற்றம் செய்த நாள் :30, டிசம்பர் 2010(13:32 IST)சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான்

- சுப.வீரபாண்டியன்

ம் பழந்தமிழர்களின் அறிவியல் திறத்தை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதத்திலும்... மனிதனை அறிவிலிகளாக்கும் மதவாத மூட நம்பிக்கைகளை அகற்றும் விதத்திலும் அமைந்த 16 அறிவியல் கட்டுரைகளை அறிவியல் தமிழில் தொகுத்து... அதை அறிவியல் மலராக வெளியிட்டது திராவிட இயக்கத் தமிழர் பேரவை. 

சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் “அறிவியல் மலர் - 2010 ” வெளியீட்டு விழா 9.12.10 அன்று மாலை நடந்தது. இவ்விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு அரசு அறிவியல் தமிழ் மன்றத் துணைத் தலைவர் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன், தமிழ் நாடு தொழில்நுட்ப மாநில மன்றச் 

செயலாளர் முனைவர் எஸ்.வின்சென்ட், கல்வியாளர் மற்றும் ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா, திராவிடர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மலர்க்குழு உறுப்பினர் பொள்ளாச்சி மா. உமாபதி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். 

முன்னாள் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா இந்த மலரை வெளியிட இருந்தது.  சமீபத்திய அரசியல் இக்கட்டான சூழலால் ஆ.ராசா வருகைதர முடியாமல் போனதனால், இந்த அறிவியல் மலரை வழக்கறிஞர் அருள்மொழி வெளியிட, அதை ரமேஷ் பிரபா பெற்றுக்கொண்டார்.

பெரியாரின் வழித் தொண்டர்கள் என்பதால், பல அரிய அறிவுடைமைக் கருத்துக்களையும், தமிழின் சிறப்புகள் மற்றும் இன்றைய கணினியுகத்திலும் நிலவும் மூடப்பழக்க வழக்கத்தைப் பற்றியும் மழைக்கால மாலை நேரத்தில் எடுத்துக்கூறினர். அந்தக் கருத்து மழையின் சாரல் நமது நந்தவனத்திலும்... 

 அறிவியல் உண்மைகளை ஆன்மீகவாதிகள் ஏற்பதில்லை - முனைவர் மு. பி. பா

தமிழ் நாடு அறிவியல் மன்றத் துணைத் தலைவர் என்ற முறையில்,  சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு இந்த அறிவியல் மலரை அனுப்பி வைத்தேன். நான் எதிர்பார்க்காத வகையில், மயில்சாமி அண்ணாதுரையிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தப் புத்தகம் குறித்து பல தகவல்களை பேசியதுடன் இதில் சில திருத்தமும் கூறினார் அவர். மயில்சாமியின் இந்தச் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அறிவியல் என்றால் அனைவருக்கும் புரிகிறது. ஆனால் அறிவியல் தமிழ் என்று சொன்னால் அதென்ன என்று கேட்பவர்களும் உண்டு. நம் தாய்மொழித் தமிழின் வழியில் அறிவியலை வழங்குவதே அறிவியல் தமிழ்.

 தாய்மொழி வழி அறிவியல் குறித்து மயில்சாமி அண்ணாதுரை, “சந்திரியானை நிலவிற்கு அனுப்பும் அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம், எனது தாய்மொழி தமிழ்வழியில் கல்வி கற்றதும், தாய்மொழியில் அறிவியலை சிந்தித்ததுமே ஆகும்” எனக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலம் உலகையே கட்டிப்போட்டுள்ளது என்கின்றனர். அது உண்மையில்லை. ஆங்கிலமே இல்லாமல் உலக அளவில் உயர்ந்திருக்கும் எத்தனையோ நாடுகளை பட்டியலிட்டு கூறலாம். ஜப்பான், பிரான்சு, சீனா, பாரீஸ் போன்ற நாடுகள் தம் தாய்மொழில் மட்டுமே சிந்தித்து பொருளாதார அளவிலும், அரிய கண்டுபிடிப்பிலும் சிறந்து விளங்குகின்றன. 

பாரீஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு சென்றிருந்த போது, ஒரு ஆங்கில பத்திரிக்கை வாங்கிவரச் சொல்லி அனுப்பினார் கலைஞர். ஆனால், பாரீஸ் நகரமெங்கும் தேடியும் ஒரு ஆங்கில நாளிதல்கூட கிடைக்கவில்லை. 

‘ஈப்ரு’ என்ற மொழி அழிந்து விட்ட மொழியாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், ஈப்ரு மொழியில் உள்ள சொற்களை எல்லாம் கலைச்சொற்களாக தொகுத்து அகராதி தயாரித்து, அதை கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைத்து அம்மொழிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துவிட்டனர் அம்மொழி மக்கள்.  இவ்வாறு, செத்த மொழி என்று அறிவிக்கப்பட்ட மொழிகூட உயிர் பெறும் என்றால் தமிழால் ஆகாதது என்று எதுவும் உண்டா என்ன!?.

பொதுவாகவே, அறிவியல் உண்மைகளுக்கெதிராக ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர். ‘கோபர் நிகாஷ்’  சூரிய 
மண்டலம் பற்றியும், பூமி தட்டையானது இல்லை, அது உருண்டை என்றும் கூறிய உண்மைகளை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கோபர் நிகாஷின் கருத்துக்களை எல்லாம் புத்தகமாக தொகுத்து அவரது நண்பர்கள் வெளியிட்டனர். அப்போது கோபர் நிகாஷுக்கு 70 வயது. நண்பர்கள் தயாரித்தவுடன் முதன்முதலாக கோபர் நிகாஷிடம் தந்த அந்தப் புத்தகத்தை கையில் வாங்கிப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே கோபர் நிகாஷின் உயிர் பிரிகின்றது.  கோபர் நிகாஷின் 15 ஆண்டுகால ஆய்வின் கருத்துக்கள் வெளியாவதற்குள் அவருக்கு 70 வயதாகி, ஆயுளும் முடிந்துவிட்டது.

இந்தாலி நாட்டில், கோபர் நிகாஷின் அறிவியல் கருத்துக்களை உலகிற்கு எடுத்து சொல்லிய புருனோவுக்கு நேர்ந்த கதி... அவரை மரக்கட்டையில் வைத்து எரித்து விட்டனர். இவ்வாறு கோபர் நிகாஷின் அறிவியல் கருத்துக்களை வெளியாகாமல் தடுத்தனர் மதவாதிகள்.  

மயில்சாமி அண்ணாதுரை சோதிடம் பற்றி கூறும் போது,  “என் தந்தையிடம் ஒரு சோதிடர், நான் பத்தாம் வகுப்பிற்கு மேல் தேறமாட்டேன் என்று கூறியிருந்தார். பத்தாவதிலேயே தேறமாட்டேன் என்று சோதிடரால் கூறப்பட்ட நான்தான் இன்று சந்திரயான் திட்ட இயக்குனர். என் வாழ்வில் சோதிடம் தோல்வி அடைந்து விட்டது” என்கிறார்.

இன்று உயிர் அணுக்களையே கண்டு பிடித்துவிட்டனர். அதைப் பற்றி நானே ஒரு தலையங்கம்கூட எழுதியிருக்கிறேன். உயிர் அணுக்களை கண்டு பிடிக்கும் 30 பேர்கள் அடங்கியக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார். அவர் திருச்சியில் படித்தவர்.  உயிர் அணுக்களை ஆக்கச் சக்திக்காக பயன்படுத்தப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர். உயிர்வாழ மிகவும் முக்கியதான உயிர் அணுக்களையே கண்டு பிடித்துவிட்டனர். இன்னும் மூடப் பழக்க வழக்கத்தை விடாமல் மனிதன் வாழ்கிறான்.   

தமிழில் அறிவியல் சிந்தனை வளரவேண்டும் - எஸ்.வின்சென்ட்
 
அறிவியல் மலரை தாய்த் தமிழில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறியல் என்பது இயற்கையை நேசித்தல், புரிதல், பயன்படுத்துதல் என்பதே. அறிவியலாளன் என்பவன் இயற்கையை நேசிப்பவனாக இருக்கிறான்.

கறுப்பு நிறத்தை நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் தமிழனை பிடிக்கும். அறிவியலில் கறுப்புக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. இயற்கையால் மனிதனை பேணுவதற்காக படைக்கப்பட்டதே கறுப்பு. வெயிலில் உள்ள புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்று நோயிலிருந்து மனிதனை காப்பது கறுப்பு நிறந்தான். ஆஸ்திரேலியாவில் காலை 8.30 மணியில் இருந்து 10 மணிவரை வெளியில் செல்ல மாட்டார்கள். ஏனெனில் அந்த நேரத்தில்தான் அதிகமாக புற ஊதாக் கதிர்கள் வெளியாகும் என்பதனால். ஆனால் கறுப்பாக இருப்பவர்களுக்கு புற ஊதாக் கதிர்களால் ஆபத்தில்லை. அவர்கள் உடம்பில் உள்ள மெலனின் என்னும் பொருள் சுரந்து புற்று நோயை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிரிலிருந்து அவர்களை பாதுகாக்கிறது.

இன்று பலர், கறுப்பு நிறத்தால் தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். அழகு சாதன விளப்பரங்களிலும் அது போன்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் கறுப்பின் சிறப்பைப் பெற்றவர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அறிவியல் ரீதியாக கறுப்புதான் பாதுகாப்பான, கொண்டாடத்தக்கதான ஒரு நிறம்.

இன்று தமிழர்களிடையே அறிவியல் பயன்பாடும் அது சார்ந்த சிந்தனையும் குறைந்துவிட்டது. இந்தியாவில் இது வரை நோபல் பரிசு பெற்றவர்கள் 5 பேர்கள்தான். அதில், தமிழ் நாட்டில் 2 பேர், மற்ற மாநில அளவில் 3 பேர். ஆனால் அமெரிக்காவில் இதுவரை நோபல் பரிசு பெற்றவர்கள் 305 பேர்.  எனவே, அறிவியல் சார்ந்த கருத்துக்களை தமிழ் வழி சிந்திக்க வேண்டும். தமிழில் அறிவியல் கருத்துக்களும், தொழில் நுட்ப சிந்தனையும் வளரும் போதுதான் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும்.

அறிவியலை எளிமைப்படுத்தி வளங்க வேண்டும் - ரமேஷ் பிரபா : 

வழகறிஞர் அருள்மொழி வெளியிட,  நான் இந்த நூலை பெற்றுக்கொண்டேன் என்பதைவிட... மலரைப் பெற்றுக்கொண்டேன் என்று கூறவே ஆசைப்படுகிறேன். முடிந்தவரை நூலை ஒதுக்குவதே நல்லது என்று நினைக்கிறேன். (இப்படி ரமேஷ் பிரபா கூறியவுடன், அவர் ஒதுக்கச் சொல்லும் நூல் எது என்பதை உணர்ந்து கொண்ட கூட்டத்தினரிடமிருந்து எழுந்த கரவொலி வெள்ளம் அரங்கை நிரப்பியது.)

அறிவியல் தமிழ் என்று கூறும் போது, அதை எளிமையான முறையில் வழங்க வேண்டியது அவசியம். அறிவியல் அறிஞர்களுக்கு தங்கள் கருத்துக்களை எளிமையாக மக்களுக்கு புரியும்விதம் சொல்லத் தெரியவில்லை. அப்படி எளிமைப்படுத்தி கூறும்போது அதை சரியாகவும் கூறவேண்டும். இது நம்மிடம் உள்ள பெரிய தவறாகும். 

ஒரு விலங்கியல் ஆய்வுக் கூடத்தில், மாணவன் ஒருவன் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அப்போது தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு, மேஜை மீது தட்டுகிறான் தவளை குதிக்கிறது. மீண்டும் இன்னொரு காலை வெட்டிவிட்டு மேஜையில் தட்டுகிறான் தவளை குதிக்கிறது. மூன்றாவது காலை வெட்டிவிட்டு தட்டும் போதுகூட தவளை குதிக்கிறது. நான்காவது காலையும் வெட்டிவிட்டு மேஜையில் தட்டுகிறான் தவளை குதிக்கவில்லை.  

கடைசியாக அவன் ஆய்வின் முடிவினை எழுதும் போது, “தவளைக்கு நான்கு காலையும் வெட்டிவிட்டால் காது கேட்காது” என்று தவறான கருத்தை எழுதிவிடுகிறான்.  எளிமைப்படுத்துவதில் இதுபோன்ற சிக்கல்கள், தவறுகள் வரக்கூடாது.

பத்திரிகைகளும், பிற ஊடகங்களும் அறிவயலுக்காக சில பகுதிகளை ஒதுக்கவேண்டும். காட்சி ஊடகங்களில் நிகழ்ச்சியை காட்சிப்படுத்தி வழங்குவதில் சில சிக்கல்கள்கூட இருக்கிறது. ஆனால், பத்திரிகைகள் அறிவியலுக்காக 5 பக்கங்களை தாராளமாக ஒதுக்கலாம். அப்போது தான் அறிவியல் சிந்தனையை மக்களிடையே ஏற்படுத்த முடியும்.
  
”ஐ.ஏ.எஸ். கனவுகள்”  என்றத் தலைப்பில் ஐ.ஏ.எஸ் ஆவதற்கான எளிய வழிகள் பற்றி ஒரு இதழில் எழுதி வந்தேன். சில வாரங்களுக்கு பிறகு, சிம்ரன் பேட்டியினை வெளியிடும்போது, அதை அந்த இதழ் அட்டைப்படமாக போட்டதுடன், சுவரட்டி மூலமாகவும் பயங்கரமாக விளம்பரப்படுத்தியது. அறிவியல் சிந்தனைகளை விளம்பரத்தின் மூலம் மக்களிடையே கொண்டுச் சேர்த்தால் நாட்டிற்கு நல்லது. ஆனால், சிம்ரனின் பேட்டியினால் என்ன லாபம் மக்களுக்கு. ஆனால் மக்களும் நடிகர் - நடிகைகளுக்கு தரும் மதிப்பைகூட அறிவியலுக்கு தருவதில்லை. 

இன்று, பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்புகளை தமிழில் படிக்க முடியும். அறிவியல் நுட்பம் அனைத்தையும் தமிழில் கூறமுடியாது என்கிறார்கள். ஆனால் எல்லா அறிவியல் கருத்துக்களையும் தமிழில் வழங்கலாம்.  மகப்பேறு மருத்துவரான “ஞான சௌந்திரி” தமிழில் மருத்துவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். மருத்துவத்தின் எல்லா சொற்களையும் தமிழில் குறிப்பிடலாம். இதற்கான சொற்கள் எல்லாம் ஏற்கனவே தமிழில் இருக்கின்றன. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட மருத்துவச் சொற்கள் அனைத்துக்கும் தமிழ் சொற்கள் நமது கிராமப் புறங்களிலேயே இன்றும் வழக்கத்தில் உள்ளன என்று ஞான சௌந்தரி குறிப்பிடுகிறார். இந்த மருத்துவ புத்தகத்திற்காக கிராமத்தில் இருக்கும் வயதான பாட்டியினரிடமிருந்து சொற்களையும் கருத்துக்களையும் கேட்டு சேகரித்தாகவும் அவர் தெரிவிக்கிறார்.

படிப்பு வரைவில்லை என்றால் விவசாயம் பார் என்கிறார்கள். ஆனால், வியசாயத்திற்காகவே தனியாக ஒரு படிப்பு இருக்கிறது என்பதை மறந்து, படிப்பு வராதவன் விவசாயம் பார்க்க வேண்டும் என்ற சிந்தனைதான் இன்றும் நிழவுகிறது. வேதியல், இயற்பியல் ஆராய்ச்சிகளை விரும்பி படிக்க வேண்டும் என்பதை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். பொறியியல், மருத்துவம், தகவல் தொழில் நுட்ப படிப்புகள் எல்லாம் சாதாரண மாணவனுக்கும் கைக்கெட்டும் வகை செய்ய வேண்டும். 

சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரயான் - சுப.வீரபாண்டியன் :

சென்னை அம்பத்தூரில் நடந்த ஒரு கருத்தரங்கக் கூட்டத்தில், அறிஞர் வின்சென்ட் “கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கின்றது? என்றொரு கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் அவரே தந்தார். 

கடல் என்பது,  மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்று நீர்களால் உருவாகிறது. இப்படி மூன்று நீர்களினால் உருவான கடல் என்பதை விளக்குவதற்காகவே “முன்னீர்” என்ற ஒரு பெயர் கடலுக்கு தமிழில் உண்டு. மழை, ஆறு, ஊற்று நீர் ஆகி மூன்றிலும் உப்பு இருப்பதில்லை. ஆனால் அவற்றால் உண்டான கடல் உப்பு கரிக்கும். காரணம், அந்த மூன்று நீர்களும் அடித்துச்செல்லும் தாதுக்களால் தான் கடலுக்கு உவர்ப்புத்தன்மை ஏற்படுகிறது என்றார். 

ஒரு ஒளியை ஏற்றுவதே இருளை அகற்றும் என்பதுபோல் இந்த அறிவியல் தமிழ் மலர் வெளிவந்திருக்கிறது.  

பெரியவர் சொல் பெருமாள் சொல்.  அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள் என்பது ஆன்மீகம். எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. ஏன்? எப்படி? என்று கேள்வி கேள், எதையும் சந்தேகப்படு என்பது அறிவியல். 

ஆரியர்களின் வேதத்தில், தவம் செய்யும் விஷ்வாமித்ரனின் தவத்தை மேனகை களைத்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஊர்வசி, ரம்பை, மேனகை யாராலும் வசிஷ்டரின் தவம் களைக்கப்பட்டதில்லை. ஏனெனில் வசிஷ்டர் ஆரியன், விஸ்வாமித்திரன் சத்திரியன்.

சம்பூகன் கதையில்... சம்பூகன் தவம் செய்ததாலேயே அவன் தலை துண்டிக்கப்பட்டதாக ராமயணத்தின் உத்திரக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. தவம் செய்யும் சம்பூகனிடம், ராமன் உன் குலம் என்ன என்று கேட்கிறான். அதற்கு சம்பூகன், தான் ஒரு சூத்திரன் என்கிறான். உடனே ராமன், “சூத்திரன் தவம் செய்வது குற்றம்” என்று கூறி அவன் தலையை வெட்டி எறிகிறான். இப்படி தவம் செய்ததற்காகவே தலை துண்டிக்கப்பட்டான் சம்பூகன்.  ராமாயணத்தின் உத்திரக்காண்டம் படித்தால் ராமனின் உண்மையான முகம் தெரிந்துவிடும். அதனாலேயே அவர்கள் உத்திரக்காண்டதை மட்டும் 
அழித்துவிட்டனர். 

இன்று உத்திரக்காண்டம் எங்கு தேடினாலும் கிடைக்காது. ஆனால் பெரியார்
அதை தனது நூலகத்தில் பத்திரப்படுத்தி 
வைத்துள்ளார். உத்திரக்காண்டத்தின் முதல் தொகுப்பு வெளிவந்ததற்கும், இரண்டாம் தொகுப்பு வெளிவந்ததற்கும் நிறைய மாறுபாடுகளும், வேறுபாடுகளும் உண்டு. அந்த மாறுபாடுகளைக்கூட பெரியார் குறித்து வைத்துள்ளார். முதலாவது உத்திரக்காண்ட தொகுப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி இரண்டாவது தொகுப்பில் எழுதிவிட்டார்கள். வேத, இதிகாசங்களையே தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி எழுதிக் கொள்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம். அப்படி என்றால் இவர்கள் கற்பிக்கும் வேதக் கருத்தைதான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?.

ரஜினியிடம்கூட நான்,  “தவம் செய்த காரணத்திற்காகதான் சம்பூகன் தலையை வெட்டினார்கள். நீங்களும் வடக்கில் தவமிருக்கப் போகிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறேன்.

இது போன்று நம்மை அறிவிலிகளாக்கும் தன்மைகள் குறித்து, பல்வேறு துறைச் சார்ந்தவர்கள் எழுதிய 16 அறிவியல் கட்டுரைகள் இந்த அறிவியல் தமிழ் மலரில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கட்டுரைகள் அறிவியல் துறையல்லாதவர்களான புலவர் தணிகைச்செல்வன் மற்றும் வினோத் குமார் ஆகியோரினவை.

‘அறிவியல் அறிவு வேறு, அறிவியல் பார்வை என்பது வேறு’ என்று தணிகைச் செல்வன் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே நியூமராலஜி என்னும் எண் கணித சோதிடத்தில் நம்பிக்கை வைத்துள்ளார். அவர் சொல்லிக்கொடுக்காத எண்களையா எண் கணித சோதிடம் சொல்லிவிடப் போகுது. 

மாணவன் ஒருவன்,  சந்திரயானை, ஏன் திருப்பதியில் பூஜை செய்த பின்னால் விண்ணில் செலுத்தினீர்கள்?  இது மூட நம்பிக்கை இல்லையா? என்று மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்கிறான். 

அதற்கு மயில்சாமி அண்ணாதுரை, “எனக்கு சோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லை. இது போன்ற மூட பழக்கங்களிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் சில முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அங்கு செவ்வாய்க் கிழமையில் எந்த ஒரு புதியத் திட்டத்தையும் தொடங்குவதுகூட இல்லை. நான் பணியாற்றும் நிறுவனத்தின் நடைமுறைக்கு கட்டுப்பட்டு நான் செயலாற்ற வேண்டி உள்ளது.  அந்த வகையில்தான் திருப்பதியில் செய்யப்பட்ட பூசைக்கு பிறகு சந்திரயான் விண்ணில் செலுத்தப்பட்டது” என்று பதிலளித்தார். ஆனால், அப்படி பூசை செய்து, சகுணம் பார்த்து அனுப்பப்பட்ட சந்திரியான்தான் சமீபத்தில் கடலில் விழுந்தது. 

ரிட்ஸ் கடிகாரத்தை அறியவியலாளன் கண்டுபிடித்தால் அதில் ஆன்மீகவாதி ராகுகாலம் பார்க்கிறான். கண் கண்ணாடியை அவன் கண்டு பிடித்தால், அதில் இவர்கள் பாகவதம் படிக்கிறார்கள். கணினியை அறிவியல் தந்தால், அதில் இவர்கள் சோதிடம் பார்க்கிறார்கள். யானையை குப்பிடுகிறார்கள். அதையே பிச்சையும் எடுக்க வைக்கிறார்கள்.

தொகுப்பு :~  நா . இதயா ,  ஏனாதி...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள் [3]
Name : natarajan Date :4/10/2012 8:53:39 AM
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த ஆன்மிகம் (?) மனித முன்னேற்றத்துக்கு என்ன செய்தது? நவீன கண்டு பிடிப்புகள் எல்லாமே கடவுள் மறுப்பாளர்களால் உருவாக்கப் பட்டது.மனிதர்கள் உண்மையாக மனிதர்கள் ஆனதே இவர்கள் கண்டு பிடிப்புகளால் தான். மனிதர்களை மூடர்களாக்கிக் கொண்டிருந்தனர் ஆன்மீக வாதிகள்.சந்திரனை பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது, பூமியில் இருட்டு பரவுகிறது நான் காப்பாற்றுகிறேன் என்று தட்சிணையும் யாகம் செய்தும் பணம் பறித்துக் கொண்டிருப்பவர்களை தோலுரித்துக் காட்டியது அறிவியல். உலகம் உருண்டை அது சூரியனை சுற்றி வருகிறது என்ற ப்ருனோவை தீயிலிட்டுக் கொன்றவர்கள் ஆன்மீகவாதிகள். கலிலியோவை பதினாறு ஆண்டுகள் வீட்டுச் சிறையில் இட்டது ஆன்மீக வாதிகள்.அறிவியலாளர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்ததால் தான் புதுமைகள் உலகில் நிகழ்கின்றன, புதுமைகள் நிகழ நேரம் வீணடிக்கப் படக் கூடாது. பஜனை செய்து யாகம் செய்து நேரத்தை வீணடிப்பவனால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது.மக்களை மூடர்களாக வைத்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். மக்கள் மூடர்களாக இருந்தால் தான் அவன் சொகுசாக வாழ முடியும்.
Name : EBU/PARIS Date :9/26/2011 11:26:33 PM
விஞ்ஞானத்தில் உண்மை இருப்பின் சில தறுதலைகள் வேண்டுமென்றே குறைகூறுகிறார்கள்.கடவுள் பக்தி என்பது பற்றவர்களை ஏமாட்ற தான் .கடவுள் இல்லை என்று கண்டுபிடித்த எனக்கு எந்த கடவுள் வரம் கொடுத்தார்.ஊரை ஏமாற்றி உலையில் போடுபவந்தான் ஆன்மீகவாதி.
Name : niyayasthan Date :1/13/2011 10:03:28 AM
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அற்புத கண்டுபிடுப்புக்கள் எல்லாமே கடவுள் பக்தி உடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை. எத்தனை நாத்திகன் இது போல சேவை செய்துள்ளான்? நாத்திகர் கண்டுபிடித்தது பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள தயிர்பச்சடி மட்டுமே.